Header Ads

test

அடுத்த வருடம் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் - கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்.

 கல்வி அமைச்சினால் அடுத்த வருடம் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் தொடர்பில் அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரவுகளை ஒரே கட்டமைப்பில் உள்ளீடு செய்யும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனூடாக ஆசிரியர், அதிபர்களின் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் போன்றவை தொழில்நுட்ப முறையின் அடிப்படையில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



No comments