வவுனியாவில் இடம்பெற்ற துயரச் சம்பவம்.
வவுனியா - மெனிக்பாம் பகுதியில் உள்ள புகையிரத கடவையினை கடக்க முயன்ற குடும்பஸ்தர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்றைய (04) தினம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவது,
செட்டிகுளம் - துடரிக்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மோகனதாஸ் (வயது 55) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
செட்டிகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து விவசாய காணியினை பார்வையிடுவதற்காக மெனிக்பாம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது குறித்த பகுதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட நிலையில் தொடருந்துடன் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பறையனாலங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment