மாணவனை முத்தமிட்ட ஆசிரியர் விளக்கமறியலில்.
பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவனை பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் வன்கொடுமை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் ஹொரண கல்வி வளர்ச்சிக்குட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
குறித்த ஆசிரியை மாணவனின் வீட்டிற்கு சென்று மாணவனை முத்தமிட்டத்துடன் மேலதிக துஷ்ப்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளார்.
குறித்த ஆசியரை கைது செய்த பொலிஸார் அவரை ஹொரண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி உள்ளனர்.
இதை அடுத்து இம்மாதம் 6 திகதி வரை ஆசிரியையை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.பாதிக்கப்பட்ட மாணவனின் வகுப்பாசிரியையே இச்செயலை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
குறித்த ஆசிரியர் 42 வயதுடையவர் எனவும் 3 பிள்ளைகளின் தாயார் எனவும் தெரியவந்துள்ளது.பாதிப்புக்குள்ளான மாணவனின் பெற்றோர்கள் வெளிநாட்டில் உள்ளதாகவும் மாணவனின் தாயின் சகோதரியிடமே மாணவர் வளர்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐந்தாம் திகதி மாணவனின் சிறிய தாயார் (சித்தி) வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த வேளையில், குறித்த ஆசிரியை மாணவனை தேடி வீட்டிற்கு சென்றவேளை மாணவன் வீட்டில் தனியாக இருந்ததாகவும், இச்சமயத்திலேயே குறித்த சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment