Header Ads

test

கிளிநொச்சி குளமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு.

 கிளிநொச்சி கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த பகிரதன் சுமன்  என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானின் அனுமதியுடன் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments