நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த துயரம்.
வென்னப்புவ, பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பன்னல, மாகந்துர பகுதியில் மேலதிக வகுப்பு மாணவர்கள் 80 பேர் அந்த பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த நிலையில் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாணவர்கள் குழு ஒன்று நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது, குறித்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சந்தலங்காவ பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் ஹலவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment