Header Ads

test

நாட்டில் தீவிரமாக பரவிவரும் மற்றுமொரு நோய்.

 கோவிட் தொற்று பரவும் நிலையில், மறுபுறம் எலிக்காய்ச்சல் இலங்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.

எனினும் எலிக்காய்ச்சல் குறித்த அவதானம் மக்கள் மத்தியில் குறைவாகவே காணப்படுகின்றது. 

மழையுடனான வானிலை காரணமாக விவசாயப் பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நெற்செய்கையில் ஈடுபடும் போது சிறுநீரக நோயாளர்கள் மற்றும் கல்லீரலுடன் தொடர்புடைய நோய் தொற்றுக்குள்ளானவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

வயல்களை அண்மித்த பகுதிகளில் துப்பரவு பணிகளில் ஈடுபடும் போது அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


No comments