Header Ads

test

பிரமாண்டமான முறையில் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள இலகுரக பேருந்து.

 இலங்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இலகுரக பேருந்து ஒன்றை கலகெடிஹேன சனிரோ நிறுவனம் தயாரித்துள்ளது.

கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் கண்டுபிடிப்புப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் மாணவரான கனிஷ்க மாதவ என்பவரின் படைப்பாற்றலால் இந்த பேருந்து தயாரிக்கப்பட்டதாக சனிரோவின் தலைவர் நிலந்த தில்ருக் தெரிவித்தார்.

22 அடி நீளமும், 5 அடி 6 அங்குல அகலமும் கொண்ட இந்த பேருந்து 660 என்ஜின் திறனை கொண்டுள்ளது.

அரசாங்கம் அனுரனை வழங்குமாயின் நாட்டிலேயே பேருந்து இயந்திரத்தை தயாரித்து உயர்தர பேருந்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 


No comments