யாழில் நள்ளிரவில் இடம்பெற்ற விசித்திரமான பிறந்தநாள் கொண்டாட்டம் - கூண்டோடு அள்ளிச் சென்ற பொலிஸார்.
யாழ்ப்பாணம் - கோப்பாய் நாவலர் பாடசாலை முன் உள்ள வீதியில் நேற்று நள்ளிரவு (03-12-2022) 12 மணியளவில், 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீதியினை மறித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
இந்தவேளை தெல்லிப்பழை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, வீதியால் பயணம் செய்துகொண்டிருந்தார்.
இதன்போது குறித்த இளைஞர்கள் சட்ட அதிகாரியின் வாகனம் பயணிப்பதற்கு இடமளிக்கவில்லை.
அவர் தொடர்ந்தும் வாகனத்தை செலுத்திய வேளை வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. இதனையடுத்து சட்ட வைத்திய அதிகாரி மேலிடத்திற்கு அறிவித்தல் வழங்கினார்.
விரைந்து செயற்பட்ட கோப்பாய் பொலிஸார் இளைஞர்களை கைது செய்துள்ளதோடு இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment