யாழில் குடும்பஸ்த்தர் ஒருவர் மீது இடம்பெற்ற சரமாரியான வாள்வெட்டு தாக்குதல்.
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் வர்த்தக நிலைய உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
நேற்றைய தினம் இரவு மின்வெட்டு அமுலில் இருந்தவேளை 2 மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு கும்பல் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து வாள்வெட்டு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 35 வயதான வர்த்தக நிலைய உரிமையாளர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment