கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒரு தொகுதி ஆபத்தான பொருட்கள் மீட்பு.
கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கடந்த 01.12.2022 அன்று மாங்குளம் பகுதியில் உள்ள கல்குவாறிப்பகுதியில் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது மாங்குளம் கல்குவாறி பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் உள்ளூர் துப்பாக்கியும் 100கிராம் நிறைகொண்ட ஈயம் மற்றும் தீக்குச்சி மருந்து துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வாள் மற்றும் மான் கொம்புகள் இரண்டும் மிட்கப்பட்ட நிலையில் சந்தேகநபர் ஒருவர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment