Header Ads

test

மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மாமியாரின் வீட்டிற்கு கைக்குண்டு வீச முற்பட்ட மருமகன்.

 தனது மாமியார் வீட்டின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்த முயற்சித்த மருமகனை வெடி குண்டுடன் பொலிஸார் கைது செய்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்தில் நடந்துள்ளது.

47 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பொலிஸார், 

மாமியார் மற்றும் மருமகனின் வீடுகள் தம்பலகாமத்தில் உள்ள கிராம் ஒன்றில் அருகருகே இருக்கின்றன. சந்தேக நபர் ஊர்காவற்படை வீரராக கடமையாற்றி வருகிறார்.

சந்தேக நபருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டையேற்பட்டு வந்துள்ளது. சண்டை ஏற்படும் போது மனைவி அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விடுவதால், சந்தேக நபர் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.

இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு சந்தேக நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சந்தேக நபர் கைக்குண்டு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு வாசலில் சத்தமிட்டு, குண்டை வீசி அனைவரையும் அழிக்க போவதாக எச்சரித்துள்ளார்.

இது குறித்து சந்தேக நபரின் மனைவியும் தாயாரும் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், கைக்குண்டுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் மற்றுமொரு கைக்குண்டு, நிர்மாணிக்கப்பட்டு வரும் குளியலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


No comments