Header Ads

test

யாழில் பலரையும் கண்ணீரில் ஆழ்த்திய இளம் பெண்ணின் மரணம்.

யாழில் இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் பட்டம் பெற்ற தவராசா தர்ஷினி (வயது 25) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது மரணத்துக்குத் தானே காரணம் என்றும் பெற்றோரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் தனது தங்கைக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

அத்துடன் அக் கடிதத்தில் தொலைபேசி பாவனை தொடர்பிலும் தங்கைக்கு அறிவுரை கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடியதாகவும், பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றபோது பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஒன்றரை வருடத்திற்கு முன் இவருக்குப் பதிவுத் திருமணம் நடந்தது என்றும், தற்போது பெற்றோருடன் வசித்து வருகின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அவரது சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


No comments