பரிதாபகரமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்.
பிலியந்தலை – ஜயமாவத்தை பிரதேசத்தில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் சிக்கி 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காரின் கதவுகளை திறக்க முடியாத நிலையில் குறித்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரில் சிக்கியிருந்த மாணவனின் வாயில் இருந்து சளி வடிந்துள்ளதாகவும், உடல் முழுவதும் அதிக வியர்வையுடன், உடல் சூடாக காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மாணவனை உடனடியாக மீட்டு பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Post a Comment