Header Ads

test

குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு.

 இன்று (டிசம்பர் 01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நெத்தலியின் விலை ரூ. 150 ரூபாவாகவும், சிவப்பு அரிசி 6 ரூபாவாகவும், கீரி சம்பா 15 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது.

திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு

01. சிவப்பு அரிசி – ரூ. 199

02. கீரி சம்பா - ரூ. 225

03. பெரிய வெங்காயம் – ரூ. 225

04. நெத்தலி  - ரூ. 1150 


No comments