Header Ads

test

சர்வதேசத்திடம் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்.

 சர்வதேசத்தின் நீதி கோரி வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (30.11.2022) காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

கொலையாளி ஜனாதிபதியாய் உள்ள நாட்டில் எமக்கு எப்படி நீதி கிடைக்கும் , குடும்பங்களாக சரணடையும் போது அவர்களுடன் சேர்ந்து சரணடைந்த 29ற்கு மேற்பட்ட குழந்தைகள் எங்கே?, யுத்த காலத்தில் மரணித்த இராணுவ உடல்களை பொறுப்பெடுக்க மறுத்த சிங்கள அரசு அவர்களை காணாமல் ஆக்கப்பட்டோர் என அவர்களின் குடும்பத்தையும் ஏமாற்றுகின்றது போன்ற பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பெற்றோர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

வலிந்துகாணாமல்  ஆக்கப்பட்டோர் உறவுகளால் கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் நேற்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சர்வதேசத்திடம் நீதி கோரி மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.






No comments