Header Ads

test

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்.

அரச பணியாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் முறையில் ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

அரச பணியாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் முறையில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படமாட்டாது.

மாணவர்கள் தொடர்பில் பல விடயங்களை கருத்திற்கொண்டே, ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது இடமாற்றம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றமையினால் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் அளவு,பாடசாலையின் ஆசிரியர் தேவை என்பன இடமாற்றங்களின் போது அதிகளவு கவனம் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொழிநுட்ப நிர்வாக ரீதியாக உரியமுறையில் பயன்படுத்தாமையே இந்த பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 


No comments