Header Ads

test

கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - 22பேர் வைத்தியசாலையில் அனுமதி.

 கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பேருந்து குடைசாய்ந்ததால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 



No comments