கொழும்பில் மீண்டும் வெடித்துள்ள பாரிய போராட்டம் - திக்குமுக்காடும் பொலிஸார்.
கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்படுவதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது குறித்த ஆர்ப்பாட்டம் நாடாளுமன்றத்திற்கு செல்லும் பிரதான வீதிக்கு அருகில் பத்தரமுல்ல வழியில் மேற்கொள்ளப்படுகிறது.
உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டக்காரரர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் நுழையா வண்ணம் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment