தந்தையால் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம் - நீதி மன்றம் வழங்கிய உயர்ந்தபட்ச தீர்ப்பு.
பொலனறுவை - நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் தனது 15 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்துக்காக அவரது 45 வயதுடைய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பொலனறுவை மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், 10 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாய் இல்லாத நிலையில், தமது பாதுகாப்பில் இருந்த மகளை தந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவம் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது இந்த சிறை தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் பொலனறுவை மேல்நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பொலன்னறுவை உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தண்டனை விதிக்கும் போது, மேல் நீதிமன்ற நீதிபதி திறந்த நீதிமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.
தந்தையொருவர் தனது 15 வயது மகளை வல்லுறவுக்கு உட்படுத்தியமை ஒரு ஒழுக்க நெறி சமூகம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாத கடுமையான குற்றச் செயலாகும். அந்தக் குற்றத்தின் விளைவாக, பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும், அந்தச் சம்பவத்தின் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் எதிர்காலத்தை அழித்துவிட்டதாகவும், இதனை ஒரு போதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
குற்றவாளிகள் செய்த இந்த குற்றத்தால், பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வியும் சீர்குலைந்து, எதிர்காலம் இருள் சூழ்ந்துள்ளது.குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கும் போது, சிறுமிக்கு ஏற்பட்ட இழப்பை நிதி இழப்பீடு மூலம் ஈடுசெய்வது மிகவும் கடினம்.சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக விளங்கும் வகையில், தவறுகளில் இருந்து சமூகத்தை காக்கும் வகையில் தண்டனை இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Post a Comment