Header Ads

test

யாழில் சிறுவன் மீது கோரத் தாக்குதல்.

 யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் பாடசாலை கல்வியை இடைநிறுத்தி இணுவில் பகுதியில் உள்ள அலங்கார பொருட்கள் விற்பனையகம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார்.

இந்நிலையில் சிறுவன் விற்பனையகத்தில் இருந்து நேற்றைய தினம் தனது துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கி செல்லும் போது, தெல்லிப்பளை பகுதியில்  மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று சிறுவனை வழி மறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன்போது காயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டுசிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


No comments