கொழும்பில் வெடித்த பாரிய போராட்டம்.
கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போராட்டத்தால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்திற்கு எதிராக மருதானை - டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சற்றுமுன் போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலும் போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருந்திரளான பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment