பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கில் இடம்பெற்ற அதிசயம்.
பிரித்தானிய மகாராணியார் இயற்கை எய்திய செப்டம்பர் 8ஆம் திகதி, விண்ட்சர் மாளிகைக்குமேல் ஒரு வானவில் தோன்றிய விடயம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதேபோல, பக்கிங்காம் மாளிகைக்குமேலும் இரட்டை வானவில் தோன்ற, மக்கள் அதை தங்கள் அன்பிற்குரிய மகாராணியாரின் மறைவுடன் இணைத்து நெகிழ்ந்தார்கள்.
A rainbow appears over Westminster Palace on the Queen's final night lying in state.#lyinginstate #westminsterrainbow #rainbow #rainbowoverthequeen #qe2 #london #westminstersunset #sunsetoverlondon pic.twitter.com/3E3Q8mmUPS
— Robert Green (@RobG_UK) September 19, 2022
இந்நிலையில், மகாராணியாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் முடிவுக்கு வந்த அந்த நேரத்தில், மீண்டும் ஒரு வானவில் வானத்தில் தோன்றியதால் மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
இதுபோக, மகாராணியாரின் சவப்பெட்டி கொண்டு செல்லப்படும்போது அவரது சவப்பெட்டியின் மீது சரியாக வானிலிருந்து ஒளிக்கற்றை ஒன்று விழுந்ததையும் எண்ணிப்பார்க்கும் மக்கள், ஆச்சரியத்திலும், இன்ப அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளார்கள்.
Post a Comment