Header Ads

test

திருகோணமலையில் உருவாகியது தமிழர் பேரவை.

திருகோணமலை தமிழர் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு ஆர்.ஜெரோம் தலைமையில் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் (23.09.2022) திருகோணமலை வாடி வீட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்து தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக ஒற்றுமையுடன் ஒரே குரலாக செயற்படுவதே தமது நோக்கம் என குறித்த பேரவையின் தலைவர் ஆர்.ஜெரோம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அதற்கான சிறந்த தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காகவே இப்பேரவை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் முன்னெடுத்துள்ள பாதையில் இருந்து விலகாது தொடர்ந்து செயற்பட  உத்தேசித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


No comments