Header Ads

test

விருந்துக்கு அழைத்து கணவன் மனைவி மீது சரமாரி கத்திக் குத்து - மனைவி உயிரிழப்பு.

 விருந்துக்கு அழைத்து கணவன், மனைவி மீது சரமாரி கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்த நிலையில் கணவன் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

குறித்த சம்பவம் பொரலஸ்கமுவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பெண்ணின் நண்பர் ஒருவரினால் குறித்த தம்பதியை விருந்திற்கு அழைப்பதாக குறிப்பிட்டு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

பின்னர் குறித்த பெண் மற்றும் அவரது கணவர் உட்பட இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று பொருபனபாலத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்படி கணவன், மனைவி மீது கத்தியால் தாக்கியுள்ளார்.

இதன்போது காயமடைந்த பெண், பெண்ணின் கணவர் மற்றும் தாக்குதலை மேற்கொண்ட நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 34 வயதுடைய ஒருவர் எனவும் அவர் விகாரை வீதி, பொரலஸ்கமுவ பிரதேசத்தை ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.


No comments