யாழில் கிணற்றிலிருந்து மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம்.
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 70 வயதுடைய வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வயோதிப பெண் திருமணம் செய்யாமல் தனியாக வசித்து வந்த நிலையில் அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அவர் உயிரிழப்பதற்கு முன்னர் கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment