பல இலட்சம் பெறுமதியான வெடிபொருட்கள் மீட்பு.
சுமார் 18 இலட்சம் ரூபா பெறுமதியான வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
தொம்பே - பனன்வல பகுதியில் வைத்து இவ்வாறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கெப்ரக வாகனமொன்றில் வெடிபொருட்கள் கொண்டு செய்யப்பட்ட போது விசேட அதிரடிப்படையினர் அவற்றை மீட்டுள்ளனர்
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமோனியா நைட்ரேட் என்ற வெடிபொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.சந்தேகநபரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான நபர் என தெரியவருகிறது.
Post a Comment