யாழில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள இளைஞர்கள்.
யாழ்.மாவட்டத்தில் ஆரம்ப வகுப்பு மாணவர்கள் மீதான ஆசிரியர்களின்தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.மாவட்டச் செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்தவிடயம் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
அதேவேளை உயிர்கொல்லி போதைப் பொருளான ஹெரோய்னுக்கு 18 - 23 வயதுக்கும் இடைப்பட்ட பல இளைஞர்கள் அடிமையாகியுள்ளதனால் 10பேர் வரை யில் கடந்த 3 மாதங்களுக்குள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 320 பேர் வரையில் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். யாழ்.போதனா மருத்துவமனையில் 134 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதால் யாழ்.மாவட்டத்திலேயே புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் இதற்கான காணிகளை வழங்க முடியும் என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் மேற்படி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விரைவில் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரியவருகின்றது.
Post a Comment