Header Ads

test

குருந்தூர் மலை நில அபகரிப்பு தொடர்பில் வெடித்த மக்கள் போராட்டம்.

குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி நிர்மாணிக்கப்படும் விகாரை தொடர்பிலும் தொல்பொருள் திணைக்களத்தால் விடுமுறை நாளில் எல்லைக் கல்லிட்டு மக்களின் காணிகள் அபகரித்தமைக்கு எதிராகவும் மாபெரும்  போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக இடமான தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அத்துமீறி  அமைக்கப்பட்ட விகாரையின் கட்டுமான பணிகள் தொடர்பில், முல்லைத்தீவு நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி விகாரை  அமைப்பு பணிகள்  நிறைவுக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அதேவேளை விடுமுறை தினத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் மக்களின் காணிகளுக்குள் எல்லை கற்கள்  இடப்பட்டு மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு குருந்தூர் மலையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது.

மக்களுடைய மத உரிமை, நில உரிமை பறிக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலைமையில் இவற்றிற்கு எதிராக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று (21) காலை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கிராம மக்கள்,அரசியல் பிரமுகர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









No comments