Header Ads

test

ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க விடுத்துள்ள அதிரடி உத்தரவு.

 சுகாதார பொருட்களுக்கான வரியை குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். 

இந்த விடயத்தை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறவீட்டுச் சட்டமூலத்தில் நேற்று (20.09.2022) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றத்தில் இன்று (21.09.2022) அறிவித்துள்ளார்.

இந்தச் சட்டமூலம் கடந்த 08ஆம் திகதி மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி வருடமொன்றில் 120 மில்லியன் ரூபாவிற்கு அதிகமாக இலாபம் பெறும் இறக்குமதியாளர், உற்பத்தியாளர், சேவை வழங்குநர்கள், மற்றும் மொத்த விற்பனையார் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் மொத்த விற்பனை வரவின்மீது 2.5 வீதம் வரியாக விதிக்கப்படும்.

மேலும், 2022ஆம் ஆண்டு 25ஆம் இலக்க சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டம் இன்று (21.09.2022) முதல் நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments