Header Ads

test

இலங்கையில் மீண்டும் எரிபொருளாக்காக காத்திருக்கும் அவலம்.

 இலங்கையில் சமீப காலமாக நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் எரிபொருள் வரிசை நீண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என்ற பதாகைககள் மீண்டும் தொங்கவிடப்பட்டுள்ளதுடன் பல எரிபொருள் நிலையங்களில் மக்கள் வரிசை காணப்படுகிறது.

எரிபொருள் கையிருப்பு இன்மையால் முத்துராஜவெல முனையம் மூடப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.

முத்துராஜவெல முனையத்தில் எரிபொருள் கையிருப்பு இல்லை என மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளதாக அறியமுடிகிறது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் 500 எரிபொருள் தொகுதிகளில் பாதிக்கு குறைவானவையே நேற்று (19-09-2022) விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கொலன்னாவ முனையத்திலிருந்து எரிபொருள் விநியோகம் தாமதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


No comments