யாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு நேர்ந்த துயரம்.
யாழில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வேகமாக மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற 17 வயது இளைஞன் மோதித்தள்ளியதில் யாழ் பல்கலைகழக மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து பரமேஸ்வரா சந்திக்கு அருகில் இடம்பெற்றது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் 3ஆம் வருடத்தில் கல்வி பயிலும் திருகோணமலையை சேர்ந்த மாணவியொருவரே படுகாயமடைந்தார்.
சாரதி அனுமதிப்பத்திரமின்றி மிக வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 17 வயது இளைஞன் கட்டுப்படுத்த முடியாமல் மாணவியை மோதித்தள்ளினார்.
இதன்போது காயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இளைஞனும் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment