Header Ads

test

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ரவிகரன் மற்றும் மயூரன் பொலிஸாரால் கைது.

 குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டமையை கண்டித்து நேற்றைய தினம் (21) முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம் மேற்கொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுளமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும்,காணி அபகரிப்புக்கு எதிரான போராட்ட குழுவின் தலைவருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்த பொலிஸார் விசாரணையை மேற்கொண்ட பின்னர் கைது செய்த்துள்ளனர்.

தொல்லியல் திணைக்களத்தினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றின் உத்தரவை மீறி இராணுவ பங்களிப்போடு தொல்லியல் திணைக்களத்தினரால் குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதோடு அதனை அண்டிய 632 ஏக்கர் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களும் குருந்தூர் மலை பௌத்த பிக்கு மற்றும் தொல்லியல் திணைக்களத்தினரால் ஆக்கிரமிக்கப்ட்டுள்ளதாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments