நாடாளுமன்றத்தில் உணவு விஷமானதால் ஏற்பட்டுள்ள குழப்பம்.
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறப்படும் மீன் குழம்பில் இருந்த சில மீன் துண்டுகள், அரச பகுப்பாய்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உணவு விஷமாகியதற்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் மீன் துண்டுகள் அரசாங்க பகுப்பாய்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உணவருந்திய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையான சுகவீனம் காரணமாக நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஞ்சுள செனரத் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்த தகவல் வெளியானதையடுத்து, சிற்றுண்டிச்சாலை திணைக்கள அதிகாரிகள் மீது நாடாளுமன்ற பொதுச்செயலாளர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment