Header Ads

test

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் முழங்கிய சிறிதரன் எம்பி.

 முல்லத்தீவு குருந்தூர் மலையில் உள்ள காணியை அடாத்தாக அளந்து, அதனை பிக்குவுக்கும், விகாரைக்கும் வழங்குவதற்கு தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதனை தடுப்பதற்கு உங்கள் பேரவை நடவடிக்கை எடுக்குமா, என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தேசிய பேரவை அமைப்பது தொடர்பான பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் துறைசார் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடன் நானும், சார்ள்ஸ் எம்.பியும் இன்று பேச்சு நடத்தினோம். காணி அளவீடு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறியதாகவும் சிறிதரன் எம்பி கூறினார்.

இதனையடுத்து தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு அழைப்பை ஏற்படுத்திக்கொடுத்தோம். அளவீட்டு பணியை நிறுத்துமாறு பணிப்புரை அவர் விடுத்தார் என தெரிவித்த சிறிதரன் எம்பி, அந்த பணிப்புரை எடுபடுமா என்பதை நாளைவரை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் எனவும் கூறினார்.

அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு திராணியற்ற இந்த அரசாங்கம், பேரவை கொண்டு வந்து என்ன செய்ய போகின்றது என்றும், அதனால் எதுவும் நடக்காது எனவும் சிறிதரன் எம்.பி இதன்போது மேலும் தெரிவித்தார்.


No comments