தமிழர் பகுதியில் மீட்க்கப்பட்ட இரு ஆண்களின் சடலம்.
திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டுப் பகுதியில் சடலம் இருப்பதை மக்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சடலத்தை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
உயிரிழந்த நபர் பாட்டாளிபுரம் கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய. மூன்று பிள்ளைகளின் தந்தையான மகேந்திரன் செல்வராசா என உறவினரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
குறித்த சடலம் பாட்டாளிபுரத்துக்கும் சந்தோசபுரத்துக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதியிலேயே வீதியோரத்தில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மீட்டு மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கன்னியா சிறுபிட்டி குளத்தில் மிதந்து கிடந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று (24.09.2022) மாலை மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் கன்னியா சிறுபிட்டி குளத்தில் மீட்கப்பட்ட சடலம் சம்பவ இடத்தில் காணப்படுவதுடன் குறித்த சடலத்தை அடையாளங்காண முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெிவிக்கப்படுகின்றது.
மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment