Header Ads

test

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.

 ஒரு நாள் சேவைத்திட்டத்தின் கீழ் பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கட்டாயமில்லை என பரீட்சைகள் திணைக்கள நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர், கல்விப் பொதுத்தராதரப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் 2020-2021 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பதாரர்களுக்கு உயர்தர தேர்வு முடிவுத்தாள்கள் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Notification Issued By Department Of Examinations

பாடசாலை மற்றும் வெளியக விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்தப் பாடசாலைகளின் அதிபர்களால் வழங்கப்பட்ட முடிவுத் தாள்கள் அல்லது தேர்வுத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முடிவு சரிபார்ப்பு மூலம் பெறப்பட்ட தேர்வுத் தாள்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க போதுமானதாக இருக்கும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments