Header Ads

test

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்தவர்கள் பொலிஸாரால் கைது.

  நுகேகொடை பிரதேசத்தில் இயங்கி வந்த விடுதி ஒன்று குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து அந்த விடுதி நடத்தி செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நேற்றைய தினம் குறித்த விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளதோடு, தகாத தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படும் இரு பெண்கள், கைது செய்யப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை மற்றும் மத்துகம பகுதிளை சேர்ந்த 45 மற்றும் 43 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையத்தளத்தில் வர்த்தக விளம்பரங்களை காட்சிப்படுத்தி, சூம் தொழிநுட்பம் வாயிலாக கல்விபொது தராதர சாதாரண தர மற்றும் உயர்தர கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக சூட்சமமான முறையில் இவ்வாறு தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த விளம்பரங்களை பார்வையிட்டு பல மாணவர்கள் விடுதிக்கு வருகை தந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விடுதியில் கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, விசாரைணைகள் இடம்பெற்று வருகின்றன.


No comments