தீ விபத்து தொடர்பில் 16 பாடசாலை மாணவர்கள் கைது.
எல்ல, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் 16 பாடசாலை மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பத்து ஏக்கர் பரப்பளவில் பரவிய தீயை இராணுவம், பொலிஸார் மற்றும் பிரதேச சபையின் பணியாளர்கள் இணைந்து அணைத்ததாக எல்ல அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சுற்றுலா சென்றிருந்த பாடசாலை மாணவர்கள் குழுவே வனப்பகுதிக்கு தீ மூட்டியதாக நம்பப்படுகின்றது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 16 மாணவர்களையும் இன்று நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment