Header Ads

test

யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பம்.

 யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுமி உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் மீட்கப்பட்டார்.

இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமி 08 மாத கர்ப்பமாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை குறித்த சிறுமி போதைப்பொருளினை பெற்றுக்கொள்வதற்காக துர்நடத்தைகளில் ஈடுபட்டமையினால் தான் கர்ப்பம் தரித்தார் என தெரிவிக்கப்படுகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை யாழ் மாவட்டத்தில் அண்மைகாலமாக  இளையவர்கள் மத்தியில் போதைபொருள் பாவனைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments