Header Ads

test

சீரற்ற காலநிலையால் ஆறு பேர் பலி.

 சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 93 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் நிலைமைகள் குறித்து ஜனாதிபதிக்கு தொலைபேசி ஊடாக தெளிவுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரும் உள்ளூர் அதிகாரிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சகல உதவிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி செயலகம் இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

93 people displaced and 6 people dead due to the severe weather and landslides in Nuwara Eliya.

All local authorities, army personnel & volunteers on ground.

Spoke to @RW_UNP and updated him on the situation. GA Nuwara Eliya has been contacted by the President's office.

— Jeevan Thondaman (@JeevanThondaman) August 1, 2022


No comments