கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் தீவிர பாதுகாப்பு.
கொழும்பு நகரில் இன்று (9ம் திகதி) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கு செயற்பாட்டாளர்கள் தயாராகியுள்ளதால், கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பை பாதுகாப்பதற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கலவர தடுப்பு பிரிவு நீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகைக் குழுக்களை விழிப்புடன் வைத்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பை பாதுகாப்பதற்காக பல விசேட பொலிஸ் குழுக்கள் வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
Post a Comment