Header Ads

test

பாடசாலை அதிபர் ஒருவரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்.

 இரத்தினபுரியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் அதிபர், பல மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவர்களை அதிபர் வெகுநாட்களாக தனது விடுதிக்கு அழைத்து ரொக்கப்பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்றுக்கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த வெகுமதிகள் தொடர்பான கூடுதல் தகவல்கள் ஆதாரங்களுடன் வெளிவருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் வலியுறுத்தியது.

சந்தேக நபர் நேற்று (24) இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், கடுமையான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நடக்கும் குழந்தை துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து 1929 - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் குழந்தை உதவி எண்ணுக்கு கூடிய விரைவில் தெரிவிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.



No comments