Header Ads

test

யாழில் தனிமையில் இருந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணம் இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த தெய்வேந்திரம் வசந்தி (62) மூதாட்டி நேற்று (12) வெள்ளிக் கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருவதுடன் ஒரு பிள்ளை வெளியூரில் வசித்து வருகின்றார்.

இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இவரது சகோதரன் வழமை போன்று உணவு கொடுக்க சென்ற நிலையில் சகோதரி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

அதனையடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.     


No comments