யாழில் கணவனின் தலையை அடித்துடைத்த மனைவி.
யாழ்.உரும்பிராய் கிழக்கில் மகளை கண்டித்த தந்தையை மனைவி தாக்கியதில் காயமடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
மகள் தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதாக தந்தை கண்டித்துள்ளதுடன், மகளிடமிருந்த தொலைபேசியை பறித்ததுடன் தந்தை அதிலிருக்கும் விடயங்களையும் பார்வையிட்டுள்ளார்.
இதனால் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் மகளின் முன்னால் கணவனை தாக்கியதுடன் மண்டையையும் உடைத்துள்ளார். இதில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment