Header Ads

test

அவசரகாலச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்.

 நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த விருப்பம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், அலுவலகம், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் என்பன கைப்பற்றப்பட்டன. எனது வீடு தீப்பிடித்து எரிந்தது. பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றினார்கள்.

இறுதியாக நாடாளுமன்றத்தை கைப்பற்ற வந்தடைந்தவுடன் அது நிறுத்தப்பட்டது. நாட்டின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் போது, ​​அவசர கால சட்டத்தை நான் சுமக்க விரும்பவில்லை. குறைந்தபட்ச பாதுகாப்புக்காகவே இந்த சட்டம் அமுலில் உள்ளது.

ஒருவேளை பொருளாதார விவகாரங்களில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்படும். ஏனென்றால், நாம் அனைவரும் ஒப்புக்கொண்டாலும், ஒரு பொதுச் சட்டத்தை நிறைவேற்ற ஏழு அல்லது எட்டு வாரங்களாகும்.

யாராவது நீதிமன்றம் போனால் இன்னும் இரண்டு வாரங்கள் செல்லும். எனினும் அவசர கால சட்டம் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



No comments