கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியுள்ள பாங்கொக் ஹோட்டலை விட்டு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கின் மையப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.
அங்கு அவருக்கு தாய்லாந்து இரகசியப் பொலிஸார் சிவில் உடையிலும், விசேட பொலிஸார் ஆயுதங்களுடனும் பாதுகாவல் வழங்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
எனினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக கோட்டாபய, ஹோட்டலை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என்று தாய்லாந்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போதைய நிலையில் தனது மெய்ப்பாதுகாவலர்கள் இருவரைக் கொண்டே கோட்டாபய தனக்குத் தேவையானவற்றை வௌியில் இருந்து தருவித்துக் கொள்கின்றார்.
முன்னதாக தாய்லாந்தின் புகெட் நகரில் அவருக்கு ஆடம்பர மாளிகை ஒதுக்கப்பட்டிருந்த போதும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் புகெட் நகரை விட்டு பாங்கொக் நகரில் தங்கியிருக்கத் தீர்மானித்துள்ளார்.
Post a Comment