யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு.
யாழ்ப்பாண பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர்கள் இருவருக்கு மறுஅறிவித்தல் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞான பீடத்தை சேர்ந்த முதலாமாண்டு மாணவன் ஒருவனை கடந்த 2 ஆம் திகதி பல்கலைகழக நுழைவாயிலுக்கு அருகில் வைத்து, சிரேஸ்ட மாணவர்கள் இருவர் தாக்கினார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையிலே குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு மாணவர்களுக்கும் இன்று முதல் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை பல்கலைகழக நிர்வாகம் முன்னெடுத்துள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு மாணவர்களுக்கும் மறுஅறிவித்தல் வரையில் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரு மாணவர்களும் பல்கலைகழக வளாகத்தினுள்ளோ, விடுதிக்குள்ளோ உட்பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment