Header Ads

test

வட மாகாண ஆளுநருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு.

 வடக்கு மாகாணத்தில் இருந்து அமைச்சின் செயலாளர்களை இடமாற்ற முயன்ற வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கின் இரு மூத்த செயலாளர்களான இ.இளங்கோவன், பா.செந்தில்நந்தனன் ஆகியோர் மாகாணத்திற்கு தேவையில்லை  என ஆளுநர் ஜீவன் தியாகராயா 2022-07-26 ஆம் திகதி கடிதம் வழங்கியிருந்தார்.

இதில் உரிய முறைமைகளோ அல்லது சட்ட ஏற்பாடுகளையோ ஆளுநர் பின்பற்றவில்லை எனத் தெரிவித்தே தற்போது மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கின் மூத்த செயலாளர்களான இ.இளங்கோவன், பா.செந்தில்நந்தனன் மற்றும் விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் ஆகிய மூவரே இந்த முறைப்பாட்டினை யாழ் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு மேற்கொண்ட முறைப்பாட்டில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் இருந்து தலைமைப் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


No comments