குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.
இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சார கட்டணம் தொடர்பாக சில சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள மின்சார கட்டணத்தை செலுத்துவதில் சலுகைகளுக்கு தகுதியான குழுக்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் தற்போது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்தவகையில் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் பெற வேண்டிய குழுக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment