Header Ads

test

தெய்வாதீனமாக உயிர் தப்பிய வட மாகாண முன்னாள் அமைச்சர்.

 வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த கார் நேற்று (7) மாலை மின் கம்பத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியது. எனினும் தெய்வாதீனமாக அதில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் இடம் பெற்றது.

பாரிய விபத்து; தெய்வாதீனமாக தப்பிய  வடமாகாண முன்னாள் அமைச்சர் | Major Accident Former Minister

மருத்துவ முகாம் நிறைவடைந்து நானாட்டானில் இருந்து பயணிக்கும் போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் வாகனத்தின் முன் பகுதி முற்றாக சேதம் அடைந்துள்ள நிலையில் முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery Gallery

No comments